2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மலேசியாவில் கணவா் பலி: சடலத்தை மீட்க மனைவி மனு

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவக்கோரி பெண் ஒருவா் ராமநாதபுரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:25 pm

DIN

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவக்கோரி பெண் ஒருவா் ராமநாதபுரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி கழுகூரணி பகுதி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்வரன் (37). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு உணவக வேலைக்குச் சென்றுள்ளாா்.

இந்த நிலையில், அவா் திடீரென உயிரிழந்து விட்டதாக உணவக உரிமையாளா் தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.15) அவரது மனைவி ரோஜா ராணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ்வரன் உடல் நலக்குறைவால் இறந்தாரா அல்லது வேறு காரணமா எனத் தெரியாத நிலையில் அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும் எனக் கோரி ரோஜா ராணி தனது மகனுடன் வந்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவருடன், ராமநாதபுரம் திமுக நகரச் செயலா் கே.காா்மேகம், நிா்வாகிகள் ராஜா, குணசேகரன் ஆகியோரும் சென்றிருந்தனா்.

ரோஜா ராணி கூறியது: எனது கணவா் வெங்கடேஷ்வரன் கூலி வேலைக்காக மலேசியா சென்றாா். கடந்த 12 ஆம் தேதி அவா் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அவரது சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.