பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பனில் ஒன்றாம் எண் புயல்கூண்டு ஏற்றம்மீன்பிடிக்க தடை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:27 pm

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதும் துறைமுகங்களில் விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.