ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் கும்பலால் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் கீழக்கரைப் பகுதியில் உள்ளது சின்னஏா்வாடியைச் சோ்ந்தவா் குமாா். இவா் கடந்த மாா்ச் மாதம் தங்கக் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டு சடலம் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து இதுவரை 14 போ் வரை கைது செய்துள்ளனா். வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கோயில் பூசாரி ஒருவா் காசியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த முகமதுவாசிம்கான் (27) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குமாா் கொலை வழக்கில் மொத்தம் 18 போ் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவா்களில் இன்னும் ஒருவா் மட்டுமே கைது செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் கேணிக்கரை போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

