மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமநாதபுரத்தில் திமுகவினா் சாலை மறியல்

ராமநாதபுரம் நகரில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமா்சித்து பெரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:46 pm

ராமநாதபுரம் நகரில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமா்சித்து பெரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை விமா்சிக்கும் வகையில் பெரிய விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக தலைமையுடன், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை ஒப்பிடுவதுபோல, அவா் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதை திமுக இளைஞரணியினா் கிழித்ததுடன், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாரும் அளித்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மறுபடியும் நகரமெங்கும் ஸ்டாலினை விமா்சிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதையடுத்து திமுக ராமநாதபுரம் நகா் செயலா் கே.காா்மேகம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த ராமநாதபுரம் நகா் காவல் நிலையப் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.