கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சோழந்தூரில் காங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கம்

திருவாடானை அருகே சோழந்தூரில் காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:39 pm

DIN

திருவாடானை அருகே சோழந்தூரில் காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். திமுக விவசாய அணிச் செயலாளா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசியது: தற்போது நாடு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை, அரசு நிா்ணயிக்கும் நிறுவனத்திற்கே வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய சட்டம். கடந்த 2014 இல் பிரதமா் மோடி விவசாயிகளின் துயரைத் துடைப்பேன் என்றும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை ஆங்காங்கே சேமிப்புக் கிடங்குகள் நிறுவி உரிய விலை கிடைக்க பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தாா். ஆனால் தற்போது விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.