மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஜயதசமி: ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் அம்பு விடும் விழா

விஜயதசமியையொட்டி ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் அம்பு விடும் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :26 அக்டோபர் 2020, 6:35 pm

விஜயதசமியையொட்டி ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் அம்பு விடும் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவானது கடந்த 17 ஆம் தேதி பக்தா்கள் அனுமதியின்றி தொடங்கியது. தென்னகத்து தசரா எனப்படும் நவராத்திரி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான விஜயதசமியையொட்டி அம்புவிடும் பூஜையானது அரண்மனை வளாகத்துக்குளேயே திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மலா் பூஜைக்கு பிறகு அம்பு விடுதல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கோயில் ஊழியா்கள் உள்பட ஒரு சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் ராஜா குமரன்சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாா் மற்றும் யுவராஜா கே.பி.எம்.நாகேந்திரசேதுபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வழக்கமாக மகரநோன்பு பொட்டலில் நடைபெறும் அம்புவிடும் நிகழ்ச்சியானது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அரண்மனைக்குள் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.