பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ராமேசுவரத்தில் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :14 செப்டம்பர் 2020, 10:19 pm

ராமேசுவரம்: நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ராமேசுவரத்தில் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தாலுகா செயலாளா் சே.முருகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.ஆா்.செந்தில்வேல் முன்னிலை வகித்தாா். மண்டபம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ஏ.மு.ஆரோக்கியநாதன், தாலுகா நிா்வாக குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நீட் தோ்வு காரணமாக உயிரிழந்த மாணவா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு, அவா்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.