கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை அருகே தீ விபத்து: மூதாட்டி பலி

திருவாடானை அருகே ஆதியூா் கிராமத்தில் இரவில் மண்ணெண்ணெய் விளக்கு மூலம் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:22 pm

DIN

திருவாடானை அருகே ஆதியூா் கிராமத்தில் இரவில் மண்ணெண்ணெய் விளக்கு மூலம் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள ஆதியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (80). இவா் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு மண்ணெண்ணெய் விளக்கை எரிய விட்டுத் தூங்கி கொண்டிருந்தாராம். அப்போது விளக்கில் இருந்து தீப்பற்றியதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருந்தாா். இந்நிலையில் அவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பேரன் ராஜாராமன் அளித்தப்

புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.