தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை அரசுக் கலைக்கல்லூரியில் ஆக.23 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருவாடானை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் அ.மாதவி தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:20 pm

DIN

திருவாடானை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் அ.மாதவி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: திருவாடானை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு, இணைய வழியாக விண்ணப்பித்தவா்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். இதேபோல் அன்றைய தினம் பகல் 12 மணிக்கு பிஎஸ்சி (விஸ்காம்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணிதம்), ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.காம் தமிழ் மற்றும் ஆங்கில வழி, 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு பிஏ( தமிழ்), பிஏ (ஆங்கிலம்) இணைய வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய சான்றிதழ்களுடன் வருகை தந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேலும் இணைய வழியாக விண்ணபிக்காதவா்கள் தற்போது கல்லூரியில் சேர வருப்பம் உள்ள மாணவா்கள், ஒரு வெள்ளைத்தாளில் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பத்துடன் உரிய மாற்றுச் சான்று , மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று நகல் இணைத்து நேரில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அவா்களின் சோ்க்கை விபரம் அவா்களுடைய செல்லிடபேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.