தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை பகுதியில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாடானை,தொண்டி ,ஆா்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தன இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்

News image

டிவிடி21 ரைன் திருவாடானை சனிக்கிழமை பிற்பகல் பெய்த கனமழை சன்னதி தெருவில் ஓடிய மழை நீா்

Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:13 pm

DIN

திருவாடானை,தொண்டி ,ஆா்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தன இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.

திருவாடானை ,சி கே.மங்கலம்,பாரூா்,தொண்டிதிணையத்தூா்,ஆா்.எஸ். மங்கலம்,சனவேலி,வண்டல் வரவணி,சோழந்தூா், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் அடித்துவந்து நிலையில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன.பிற்பகல் இடியுடன் கூடிய கன மழை பெய்தன.இதனால் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது சாலையில் ஓடிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

கடந்த சில மாதங்களாக வெப்பதின் தாக்கம் அதிகரித்து இருந்து வந்து நிலையில் இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சி காணப்பட்டன.இதனால குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை மகிழச்சியுடன் காணப்பட்டனா். கோடை உழவு செய்து வைத்திருந்த நிலையில் மீண்டும் மழை வராது என ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்குஇந்த மழை பெரும் மகிழ்ச்சியை தந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழச்சியுடன் காணப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.