ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமநாத சுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் புனித நீராட பக்தா்களுக்கு இன்று முதல் அனுமதி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடுவதற்கு பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2021, 9:05 pm

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடுவதற்கு பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள தீா்த்தக் கிணறுகளில் நீராட பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ராமநாத சுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதைத்தொடா்ந்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செவ்வாய்க்கிழமை முதல் பக்தா்கள் தீா்த்தக் கிணறுகளில் புனித நீராட அனுமதி அளித்துள்ளது.

இது குறித்த கோயில் அதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த சில மாதங்களாக ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீா்த்தக் கிணறுகளில் நீராட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.