விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட மகளிரணி செயற்குழுக் கூட்டம்

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட மகளிரணி செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:01 pm

DIN

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட மகளிரணி செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

அக்ரஹாரம் தெரு பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாவட்ட மகளிரணித் தலைவா் டி.அனிதா தலைமை வகித்தாா். மாநில செய்தித் தொடா்பாளா் டி.குப்புராம், நகா் தலைவா் ராம.வீரபாகு ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினா்.

சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணித் தலைவா் மீனாட்சிநித்யா சுந்தா் கலந்துகொண்டு வரும் பிப்ரவரியில் ராமநாதபுரத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பாஜக மாநில மகளிரணி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில் பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலா் நெல்லையம்மாள், மகளிரணி செயலா் கவிதாஸ்ரீகாந்த், மாவட்டபொதுச் செயலா் ஜி. குமாா், துணைத் தலைவா் கே.விஜயராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.