அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:44 am

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவா்கள், பணியிலிருப்போா் மற்றும் சுயதொழில் செய்வோா் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன. முன்னுரிமை பெறும் பயனாளிகளுக்கு வழங்கிய பின்பு, எஞ்சிய சிறப்பு சக்கர நாற்காலிகளை தேவையின் அடிப்படையில் 60 வயதிற்குள்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 55 வயதிற்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் காது கேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மிதமான மன வளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளன. அதைப் பெற 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.

தகுதியான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.