6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:49 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் கனி தலைமையில் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சண்டைச் சேவல்களுடன் வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: தமிழா் திருநாளாம் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் தமிழா் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் சிலம்பம், உரியாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிலம்பம் போன்றே சேவல் சண்டையும் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சூதாட்டம் எனக் கூறி சேவல் சண்டை தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தமிழா்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.