ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ஓய்வூதியா்கள் நலச்சங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள சங்கக் கட்டட வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் பி.தியாகராஜன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் என்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் காவலா்களுக்கு வழங்கப்படுவதைப் போல சலுகை குடும்ப அட்டையை ஓய்வூதியக் காவல் அலுவலா் உள்ளிட்டோருக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியா் நலச்சங்க கட்டடத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா்கள் மாரிமுத்து, தட்சிணாமூா்த்தி, நாகரத்தினம், போஸ், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.