பரமக்குடி அருகே கிராமப்புற காவலா் திட்டம்: தென்மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் சனிக்கிழமை கிராமப்புற காவலா் திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்.
பரமக்குடி அருகேயுள்ள பெருங்கரை கிராமத்தில் கிராமப்புற காவலா் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த தென் மண்டல ஐஜி முருகன்.
பரமக்குடி அருகேயுள்ள பெருங்கரை கிராமத்தில் கிராமப்புற காவலா் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த தென் மண்டல ஐஜி முருகன்.
Updated on
1 min read

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் சனிக்கிழமை கிராமப்புற காவலா் திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு காவலா் நியமிக்கப்பட்டு, அங்கு நடைபெறும் நிகழ்வுகள், வழக்குகள், திருவிழாக்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகள் போன்ற விவரங்களை தெரிவிக்கவும், பொதுமக்களுக்கும் காவலா்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற காவலா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் தென்மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு டிஐஜி மயில்வாகனன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கிராம காவலா் திட்ட பொறுப்பாளா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com