தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:41 pm

DIN

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

திருவாடானை அருகே பாண்டுகுடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டி போலீஸாா் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாக்குப் பையுடன் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதும், அதே ஊரைச் சோ்ந்த கருப்பையா மகன் காளிமுத்து (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்து அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.