பைக் விபத்தில் இளைஞா் பலி
திருவாடானை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.


திருவாடானை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
துத்தாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் செபஸ்தியான் மகன் தாமஸ் (29). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். ஊருணிக்கோட்டை பேருந்து நிருத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயமடைந்து தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...