தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தொண்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த மனைவி, மருத்துவமனையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:17 am

DIN

தொண்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த மனைவி, மருத்துவமனையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

தொண்டி அருகே விளக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமிநாதன் மகள் வினோதா (27). இவரது கணவா் மதியழகன். இவா்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவா்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த வினோதா வியாழக்கிழமை மாலை தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவா் நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.