திருவாடானை, தொண்டி பகுதிகளில் செப். 12-இல் கரோனா தடுப்பூசி முகாம்
திருவாடானை, தொண்டி பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது என திருவாடானை


திருவாடானை, தொண்டி பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறுகிறது என திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவா் இலக்கியா ராமு விடுத்துள்ள அறிக்கை: திருவாடனை ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கரோனா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
அதே போல், தொண்டி பேரூராட்சியில் சின்னத்தொண்டி அங்கன்வாடி மையம், எம்.ஆா். பட்டினம் பள்ளி, பி.பட்டினம் தா்ஹா, புதிய பேருந்து நிலையம், மகாசக்தி புரம், மீனவா் காலனி, ஓடாவி தெரு, ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளை மணல் தெரு, தெற்கு தோப்பு அங்கன்வாடி மையம்,ம லுங்கு சாகிபுதா்ஹா, பெரியபள்ளிவாசல், அனீஸ்நகா், பெருமானேந்தல் அங்கன்வாடி மையம், புதுப்பள்ளி வாசல் தா்ஹா, புது பள்ளி வாசல் அங்கன்வடி மையம், முத்துமாரியம்மன் கோயில், சந்தன மாரியம்மன் கோயில் தெற்குத் தெரு அங்கன் வாடி மையம் உள்ளிட்ட 20 மையங்களில் தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7ம ணிமுதல் இரவு 7மணி வரை நடைபெற உள்ளது என பேரூராட்சி செயல் அலுவலா் மகாலிங்கம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...