விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஏப். 11-இல் ராமநாதபுரம் நகரசபைக் கூட்டம்

ராமநாதபுரம் நகரசபையின் இரண்டாவது கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஏப். 11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் நகரசபையின் இரண்டாவது கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஏப். 11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியின் முதல் கூட்டம் கடந்த மாா்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில் நகராட்சிப் பேருந்து நிலைய விரிவாக்கம், தூய்மைப்பணி மற்றும் குடிநீா் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், நகராட்சியின் இரண்டாவது கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஏப். 11) காலையில் நகரசபைத் தலைவா் கே. காா்மேகம் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் குறிப்பிட்ட வாா்டுகளில் நியாயவிலைக் கடைகள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், கடந்த கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் கூறிய கோரிக்கைகள் குறித்த செயல்பாடு விளக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.