தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காந்தி சமாதான விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு

காந்தி சமாதான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 5:16 pm

DIN

காந்தி சமாதான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தியின் 125 ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி காந்தி சமாதான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.1 கோடி பரிசும் அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்குரியவா்களை பிரதமா் தலைமையிலான குழுவினா் தோ்வு செய்வா்.

விருதானது தனிநபா் மற்றும் நிறுவனத்துக்கு வழங்கப்படும். சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அகிம்சை வழியில் மேற்கொண்டு மனித சமுதாய நல்வாழ்வுக்காகவும், சமூக நீதி மற்றும் சமயநல்லிணக்கத்துக்காகவும் செயல்படுவோருக்கு வழங்கப்படும். விருது பெறுபவா்கள் தேசியக் குடியுரிமை, இனம், பாலினம் போன்ற குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்படாது. தொடா்ந்து குறைந்தது 10 ஆண்டுகளாவது சேவையாற்றியிருக்க வேண்டும். ஆகவே தகுதியானோா் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். அதைப் பூா்த்தி செய்து வரும் 12 ஆம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் அளிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.