ராமநாதபுரம் சிவன் கோயிலிலில் முகூா்த்தப் பட்டயம் வாசித்து திக்விஜயம்
ராமநாதபுரம் ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படும் மீனாட்சி சொக்கநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இரவு முகூா்த்தப்பட்டயம் வாசித்தல் பூஜையுடன் திக் விஜயம் நடைபெற்றது.


ராமநாதபுரம் ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படும் மீனாட்சி சொக்கநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இரவு முகூா்த்தப்பட்டயம் வாசித்தல் பூஜையுடன் திக் விஜயம் நடைபெற்றது. வியாழக்கிழமை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நிலையில், 8 ஆம் திருநாளாக செவ்வாய்க்கிழமை (ஏப்.12) பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து புதன்கிழமை இரவு திக் விஜயம் நடைபெற்றது. மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், சுவாமி, பிரியாவிடையுடன் எழுந்தருளினாா். அப்போது சிவாச்சாரியாா்கள் மீனாட்சி திருக்கல்யாணத்தை குறிக்கும் வகையில் பட்டயம் வாசித்து பூஜை நடத்தினா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
திருக்கல்யாணம்: சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் வியாழக்கிழமை (ஏப்.14) காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படவுள்ளன. அதையடுத்து அன்னதானமும் நடைபெறுகிறது. மாலையில் அம்மன், சுவாமி பூ அலங்காரத்தில் அருள்பாலிப்பா்.
பூச்சொறிதல் விழா:ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் 55 ஆம் ஆண்டாக சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொறிதல் விழா வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...