சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:24 pm

DIN

திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் கேடகம் பல்லக்கு, பூதம், அன்னம், நந்தி, சிம்மம், குதிரை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்பாள், சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் நிலையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் சன்னிதானத்தை வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து பிற்பகல் 3 மணிக்கு தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வந்து நிலையை அடைந்தனா். பின்னா் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.