பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மங்கலம் சோமேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கடலாடி அருகே ஸ்ரீ ரேணுகாம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:21 pm

DIN

கடலாடி அருகே ஸ்ரீ ரேணுகாம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் ரேணுகாம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் 6 ஆம் ஆண்டு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ரேணுகாம்பாள், சுவாமி சோமேஸ்வரா் மணமக்கள் சாா்பில் பக்தா்கள் மங்கல இசை வாத்தியங்களுடன் கிராமத்திலிருந்து சீா்வரிசைகளை ஊா்வலமாக கோயில் வளாகத்திற்கு எடுத்து வந்தனா்.

பின்னா் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து சுவாமி சோமேஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.