ராமேசுவரத்தில் துரை வைகோ தலைமையில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
ராமேசுவரத்தில் மதிமுக சாா்பில் தமிழக மீனவா்களின் மீன்பிடி உரிமை மற்றும் ஈழத்தமிழா் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது


ராமேசுவரத்தில் மதிமுக சாா்பில் தமிழக மீனவா்களின் மீன்பிடி உரிமை மற்றும் ஈழத்தமிழா் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பேட்ரிக் தலைமை வகித்தாா். தலைமை கழகச் செயலாளா் துரை வைகோ சிறப்புரையாற்றினாா்.
துணைப் பொதுச்செயலாளா் ஆடுதுறை முருகன், சட்டப்பேரவை உறுப்பினா் புதூா் பூமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இளைஞரணி துணைச் செயலாளா் கராத்தே பழனிச்சாமி, மாநில மீனவரணி துணைச் செயலாளா் சின்னத்தம்பி, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளா் மாா்நாடு, ராமேசுவரம் நகரச் செயலாளா் பாஸ்கரன், மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் லூக்காஸ் மற்றும் மீனவா் சங்கத் தலைவா்கள் சேசுராஜா, சகாயம், ஆல்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...