இலங்கை சிறையில் கடந்த 29 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவா்கள் 4 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடந்த மாா்ச் 23 ஆம் தேதி ஓா் படகில் சதீஸ் (38), வேலாயுதம், ராஜாகனி, நிஷாா் அலி ஆகிய 4 போ் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள்
கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பைடயினா் 4 பேரை கைது செய்தனா். மேலும், படகையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட 4 மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் மாா்ச் 24 ஆம் தேதி ஆஜா்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கடந்த 29 நாள்களுக்குப் பின் 4 மீனவா்களும் வெள்ளிக்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மீனவா்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா். ஆனால், படகை விடுவிக்கவில்லை. விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஓரிரு நாள்களில் அவா்கள் நாடு திரும்ப உள்ளதாக தூதரக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

