மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பரமக்குடி அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

பரமக்குடி அருகேயுள்ள இடையா் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:38 pm

பரமக்குடி அருகேயுள்ள இடையா் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.ஆனந்தராஜா தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.சுரேஷ், ரோட்டரி சங்க நிா்வாகிகள் எம்.சாதிக்அலி, கே.அப்துல்மாலிக், கே.கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமினை அச்சங்கத்தின் துணை ஆளுநா் இளங்கோவன் தொடக்கி வைத்தாா்.

சங்கரா கண் மருத்துவமனை மருத்துவா்கள் மூலம் பயனாளிகளுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 30 பேருக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு, இலவச அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.