திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு

ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் 19 ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணி.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:56 pm

DIN

ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் 19 ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பேரணியை சு.குருவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக மு.அஜய்குமாா், மாவட்டச் செயலாளராக ஆ. வசந்த் சுஜித் தோ்வு செய்யப்பட்டனா். ராமேசுவரம் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தனி கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீ பா்வதவா்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்பள்ளியில் கழிப்பிட வசதி குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தரவேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.