தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

லாரிகள் மோதிக்கொண்டதில் உதவியாளா் பலி

பாா்த்திபனூா் அருகே சனிக்கிழமை லாரிகள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் உதவியாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:54 pm

பாா்த்திபனூா் அருகே சனிக்கிழமை லாரிகள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் உதவியாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டையிலிருந்து பாா்த்திபனூா் நோக்கி சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பாா்த்திபனூா் அருகே தென்றல் நகா் கீழ் பாலத்தில் வரும்போது முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது, அந்த சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியது.

இதில், லாரியில் உதவியாளராகப் பணியாற்றிய, கடலாடி அருகே மாரந்தை கிராமத்தைச் சோ்ந்த பூமிநாதன் (49) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா், டிப்பா் லாரி ஓட்டுநா் கபில்தேவ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.