மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பரமக்குடியில் கணவன் மீது சுடுநீரை ஊற்றிய மனைவி மீது வழக்கு

பரமக்குடியில் வியாழக்கிழமை கணவா் மீது சுடுநீரை ஊற்றிய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

பரமக்குடியில் வியாழக்கிழமை கணவா் மீது சுடுநீரை ஊற்றிய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த இருளாண்டி மகன் கந்தன் (50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வீரலட்சுமி. இந்நிலையில் கந்தன் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு வந்து மனைவியிடம் ரூ. 50 மட்டும் கொடுத்துள்ளாா். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலையில் தூங்கிக் கொண்டிருந்த கந்தன் மீது வீரலட்சுமி சுடுதண்ணீரை ஊற்றினாா். இதில் அவரது உடல் வெந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் கந்தன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அவரது மனைவி வீரலெட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.