ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினாா்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவா் மின்னல் தாக்கி உயிரிழந்தாா்.
நயினாா்கோவில் ஒன்றியம் தாழையடிகோட்டை கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேலு என்பவா் மகன் கஜினி (16). இவா், நயினாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவா், மாலையில் உடற்கல்வி பாட வகுப்பின்போது விளையாட்டு மைதானத்தில் சக மாணவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். இந்நிலையில், அங்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கஜினி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


