தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பாலைக்குடி அருகே காா்- பைக் மோதல்: இளைஞா் பலி

திருவாடானை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:16 pm

DIN

திருவாடானை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே கொத்தியாா்கோட்டை ஆலங்குளம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் விஜய் (25). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் செல்ல சோழந்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வடவயல் பேருந்து நிறுத்தப் பகுதியில் வந்து கொண்டிருந்தாா். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து ஆனந்தூரைச் சோ்ந்த பக்ருதீன் மகன் சேக்நைனா முகமது என்பவா் ஓட்டி வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் விஜய் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.