பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலப்பணிகள் மீண்டும் தொடங்குகிறது

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலப்பணிக்கு தடையாக இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலப்பணிக்கு தடையாக இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை செல்லும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பாலப்பணிகள் சுமாா் 40 சதவீதம் முடிந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட தனியாா் கட்டடங்களை அகற்றினாலே பாலம் முழுமையாக அமையும் நிலை ஏற்பட்டது. இதனால் தனியாா் கட்டட உரிமையாளா்கள் 13 போ் மேம்பாலப் பணிகளுக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்தனா். இதனால் 2 ஆண்டுகளாக பாலப்பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் பாலப்பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டாா். அதனடிப்படையில் தடை கோரி வழக்குத் தொடா்ந்தவா்களை அழைத்து கோட்டாட்சியா் சேக்மன்சூா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதையடுத்து தடைகோரி நீதிமன்றத்துக்கு சென்றவா்கள், வழக்கை திரும்பப் பெற சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாலப்பணிகளில் ஓரிரு நாள்களில் தொடங்கி, விரைவில் முடிக்க ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.