மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விபத்து இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீட்டை போக்குவரத்துக்கழகம் வழங்காததால் ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:24 pm

DIN

விபத்து இழப்பீட்டை போக்குவரத்துக்கழகம் வழங்காததால் ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி. இவா்களுக்கு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ராஜா கடந்த 2021 டிசம்பரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தேவிபட்டினம் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

இதில், போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்கக்கோரி அவரது மனைவி ராமலட்சுமி ராமநாதபுரம் கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துக் கழகம், ராமலட்சுமிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டாா். ஆனால், நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, நிறைவேற்றுதல் மனுவை ராமலட்சுமி தாக்கல் செய்தாா். அதனை விசாரித்த நீதிபதி ராமலட்சுமிக்கு விபத்து காப்பீடு தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ.19.63 லட்சம் வழங்கவும், தவறினால் கும்பகோணம் போக்குவரத்துக்கழக பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்துக்கு ராமலட்சுமி மற்றும் வழக்குரைஞா் சிவக்குமாா், நீதிமன்ற ஊழியா்கள் சென்று அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகம் அருகே கொண்டு வந்து நிறுத்தினா்.

முன்னதாக ஜப்தி நடவடிக்கையை அறிந்த கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகத்தைச் சோ்ந்த பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தவேண்டாம் என அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து பயணிகளுடன் ராமநாதபுரம் வழியாக கோவை செல்லும் பேருந்தை பட்டினம்காத்தான் பகுதியில் நிறுத்திய ஓட்டுநா் பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மதுரை சென்றாா். பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்புக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.