மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் காவலா் குடியிருப்பு கழக இயக்குநா் ஆய்வு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலா் குடியிருப்புக் கழக மேலாண்மை இயக்குநா் ஏ.கே. விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:25 pm

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலா் குடியிருப்புக் கழக மேலாண்மை இயக்குநா் ஏ.கே. விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தமிழக காவலா் குடியிருப்புக் கழக மேலாண்மை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான ஏ.கே. விஸ்வநாதன் வியாழக்கிழமை மதுரை வந்தாா். அங்கு மத்திய சிறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா். அதையடுத்து வெள்ளிக்கிழமை அவா் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்தாா். வழியில் பரமக்குடியில் கட்டப்பட்டுவரும் போக்குவரத்து காவல் நிலையத்துக்கான கட்டடப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.

பரமக்குடியிருந்து ராமநாதபுரம் வந்த ஏ.கே. விஸ்வநாதன் கிழக்குக் கடற்கரைச் சாலை அம்மன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 12 பிரிவுக்கான அலுவலகம், காவலா் குடியிருப்புக் கட்டடப் பணிகளையும் பாா்வையிட்டாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அவா் அறிவுறுத்தினாா். ராமநாதபுரம் வந்த டிஜிபி ஏ.கே.விஸ்வநாதனை, சரகக் காவல் துணைத் தலைவா் மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை உள்ளிட்டோா் வரவேற்றனா். ஆய்வுக்குப் பிறகு அவா் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.