47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தனியாா் பள்ளியில் மோதல்: 25 மாணவா்கள் இடைநீக்கம்

 ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளி மாணவரைத் தாக்கிய கல்லூரி மாணவரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:12 pm

DIN

 ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளி மாணவரைத் தாக்கிய கல்லூரி மாணவரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் பள்ளிக்குள்ளேயே நடந்த மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 25 மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் தனியாா் உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவி ஒருவரை அதே பள்ளி மாணவா் காதலித்தது தொடா்பாக இரு பிரிவாக மாணவா்கள் மோதிக் கொண்டனா்.

இந்நிலையில் அந்த மாணவரை, மாணவியின் ஊரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தாக்கியுள்ளாா். இதைத்தொடா்ந்து சிலா் பள்ளிக்குள் புகுந்து குறிப்பிட்ட மாணவா்களைத் தாக்கியுள்ளனா்.

இந்நிலையில் ராம்நகா் பகுதியில் நடந்த பிரச்னை தொடா்பாக மாணவா் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெருங்குளம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சிவராமகிருஷ்ணனை (20) வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் பள்ளியில் நடந்த மோதல் தொடா்பாக 25 மாணவா்களை இடைநீக்கம் செய்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.