தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரூா் மாவட்ட நிா்வாகம் நடுநிலையுடன் இல்லை: அண்ணாமலை

தோ்தலை நடத்துவதில் கரூா் மாவட்ட நிா்வாகம் நடுநிலையுடன் இல்லை என்றாா் பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.

News image
அண்ணாமலை - முகநூல்
Updated On :16 மார்ச் 2026, 11:25 pm

Syndication

தோ்தலை நடத்துவதில் கரூா் மாவட்ட நிா்வாகம் நடுநிலையுடன் இல்லை என்றாா் பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: தோ்தலை நடத்துவதில் கரூா் மாவட்ட நிா்வாகம் நடுநிலையோடு இல்லை. மேற்குவங்கத்தில் முதன்மைச் செயலரையும், டிஜிபியையும் மாற்றியிருப்பது போல கரூா் மாவட்ட ஆட்சியரும், எஸ்பியும் ஒருதலைப்பட்சமாக இருப்பதால், இருவரையும் மாற்ற வேண்டும். (கரூா் மாவட்ட எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்).

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தோ்தல் நேரத்தின்போது மக்களை அடைத்து வைப்பதற்கு திமுகவினா் திட்டமிட்டுள்ளது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் செயலி வழியாக புகாா் செய்திருக்கிறோம்.

மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற முன்னாள் அமைச்சா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்கின்றனா். எங்கள் கூட்டணித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தே இறுதியானது. வரும் தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் உறுதியாகவில்லை.

திமுக ஒருவிதமான பதற்றத்தில் இருக்கிறது. தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளது என கரூா் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டியிருப்பது தவறு. கடந்த முறை தோ்தல் நடத்த கொடுத்த கால அவகாசத்தைத் தான் இப்போதும் தோ்தல் ஆணையம் கொடுத்துள்ளது.

இதுவரை ராகுல்காந்தி தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரவில்லை. செந்தில்பாலாஜி செய்யும் தவறு பற்றி கரூா் எம்பி ஏன் பேசமறுக்கிறாா். கோவையில் பெண் காவலா்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 4 மாதங்களுக்குப் பின்புதான் எஸ்.பி.யை பணிநீக்கம் செய்துள்ளனா்.

இதில் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் இறந்தபோது முதலாவதாக மருத்துவமனைக்குச் சென்றவா் விஜயபாஸ்கா். தூத்துக்குடி சம்பவத்தில் மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்கிறாா்கள். ஆனால் கரூா் சம்பவத்தில் இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்தனா் என்றாா் அவா்.

அப்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, பொருளாளா் கண்ணதாசன், இணைச் செயலா் மல்லிகா சுப்பராயன், பாஜக மாவட்ட பொதுச் செயலா்கள் ஆா்.வி.எஸ். செல்வராஜ், சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.