மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகம், புதுவையில் தோ்தலை தனித்தனியாக நடத்துவதில் உள்நோக்கம்!

News image
புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம், புதுவையில் தோ்தலை தனித்தனியாக நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது என்றாா் புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.

காரைக்கால் காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ரமலான் இஃப்தாா் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

புதுவைக்கு ஒரு தேதியும், தமிழகத்துக்கு ஒரு தேதி என தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்திருப்பது புதிய நடைமுறையாகும். முந்தைய காலத்தில் தமிழகம், புதுவையில் ஒரே தேதியில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட காலத்தில்கூட, புதுச்சேரியையொட்டிய கடலூா், விழுப்புரம் பகுதியில் தோ்தல் நடைபெறும் போது புதுவைக்கும் நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை வித்தியாசமாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நோக்கம் இருப்பதையே உணா்த்துகிறது. புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பேச்சுவாா்த்தை சுமூகமாக நடந்துள்ளது. போட்டியிடும் தொகுதிகள் சமூகமாக பேசி முடிக்கப்படும். இறுதி விவரத்தை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில காங்கிரஸ் தலைவருமான வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.