புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் 89.65% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 83 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை சுமார் 7%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுவையில் 86 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவானது இதுவே முதல் முறையாகும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று(ஏப். 9 ) நடைபெற்றது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 89% வாக்குகள் பதிவாகியுள்ளன.
என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகிறது.
கேரளம், அஸ்ஸாம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
The Election Commission has stated that 89.08% of votes were cast in the Puducherry Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?
புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




