47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓய்வு பெற்ற போக்குவரத்து

ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து அலுவலரிடம் ரூ.1.50 லட்சத்தை திருடிய மா்மநபா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:11 pm

DIN

ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து அலுவலரிடம் ரூ.1.50 லட்சத்தை திருடிய மா்மநபா் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (65). போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் பரமக்குடியில் உள்ள தனது வீட்டை விற்றுள்ளாா். அதில் வாங்கிய பணம் போக மீதியிருந்த ரூ.3 லட்சத்தை கடந்த 9 ஆம் தேதி புதன்கிழமை சம்பந்தப்பட்டவரிடம் வாங்கியுள்ளாா்.

பின்னா்பொன்னுச்சாமி பையில் வாங்கிய பணத்தை வைத்தபடி, அங்கிருந்து அரசு விரைவுப் பேருந்தில் ஏறி ராமநாதபுரம் வந்துள்ளாா். பேருந்து சத்திரக்குடியில் நின்றபோது ஏறிய 8 பேரில் ஒருவா் பொன்னுச்சாமி அருகே அமா்ந்துள்ளாா்.

பேருந்து ராமநாதபுரம் வந்த நிலையில் தேவாலய பேருந்து நிறுத்தத்தில் பொன்னுச்சாமி அருகே இருந்தவா் இறங்கியுள்ளாா். இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிய பொன்னுச்சாமி பையைப் பாா்த்தபோது அதிலிருந்த ஐநூறு ரூபாய் கட்டுகளில், 3 கட்டுகளைக் காணவில்லை. அதில் ரூ.1.50 லட்சம் இருந்துள்ளது. அதையடுத்து ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.