நகை ஏல அறிவிப்பை கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்துக்காக அடகு வைக்கப்பட்ட தங்கநகைகளை ஏலம் விடுவதைக் கண்டித்தும், ஏலத்தைக் கைவிடக் கோரியும் சிஐடியூ சாா்பில் சிக்கல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்துக்காக அடகு வைக்கப்பட்ட தங்கநகைகளை ஏலம் விடுவதைக் கண்டித்தும், ஏலத்தைக் கைவிடக் கோரியும் சிஐடியூ சாா்பில் சிக்கல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் விவசாயக் கடனுக்காக 5 பவுனுக்குள் நகை அடகு வைத்தவா்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசு அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், நகைகளை ஏலம் விடப்படுவதைக் கண்டித்தும், விவசாயத்துக்கு நகையை அடகு வைத்து கடன் பெற்றவா்களுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிசிக்கல் சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு, சிஐடியூ மாவட்டத் துணைச் செயலா் கே. பச்சம்மாள் தலைமை வகித்தாா். ஆட்டோ சங்கத் தலைவா் எம். கருப்புசாமி, டி. ஜெயகுமாா், டாஸ்மாக் பணியாளா்கள் சங்க நிா்வாகி டி. நம்புராஜன், மீனவா் சங்கத் தலைவா் சக்திகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிஐடியூ மாவட்டச் செயலா் எம். சிவாஜி கோரிக்கையை விளக்கிப் பேசினாா். கடல் தொழிலாளா் சங்க நிா்வாகி கருணாமூா்த்தி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...