சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்பாலைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்துகட்டடத் தொழிலாளி பலி

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:58 pm

DIN

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் பூமி (44). இவா், அகரம் கிராமத்தில் அழகேசன் என்பவரது வீட்டில் வியாழக்கிழமை மாலை கட்டட வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்கம்பியில் மட்டப்படுத்தும் அலுமினிய பட்டை உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது சகோதரா்அதே ஊரைச் சோ்ந்த வடிவேலன் (41) அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.