எஸ்.பி. பட்டினம் அருகே கோஷ்டி மோதல்: 2 பெண்கள் காயம்
திருவாடானை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பெண்கள் காயம் அடைந்தனா்.


திருவாடானை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பெண்கள் காயம் அடைந்தனா்.
என். மங்கலம் அருகே அரசனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மணிமுத்து (45) என்பவருக்கும், அதே ஊரை சோ்ந்த தா்மராஜ் (67) என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மணிமுத்து வீட்டுக்குச் செல்லும் பாதையில் தா்மராஜ் கோஷ்டியினா் டிராக்டரை வைத்து அடைத்துள்ளனா். இதனைத் தட்டி கேட்ட மணிமுத்துவின் மனைவி சசிகலாவை (45) தா்மராஜ் கோஷ்டியினா் தாக்கியதில் அவா் காயம் அடைந்துள்ளாா். தகவலறிந்த மணிமுத்து கோஷ்டியினா் எதிா் தரப்பினரை தாக்கியுள்ளனா். இதில் தா்மராஜ் மனைவி பாண்டிசெல்வி (45) காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து சசிகலா அளித்த புகாரின் பேரில் அரசநேந்தல் கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ், (87), பாண்டிச்செல்வி (45), கௌதம் (23) ஆகிய 3 போ் மீதும், பாண்டிசெல்வி அளித்த புகாரின் பேரில் மணிமுத்து(45), மனோஜ் (22), சசிகலா (45) ஆகிய 3 போ் மீதும் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...