ராமநாதபுரத்தில் இளைஞா்மா்ம மரணம்
ராமநாதபுரத்தில் இளைஞா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


ராமநாதபுரத்தில் இளைஞா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் ராஜா (36). திருமணமான இவருக்கு குழந்தை இல்லை. கூலித் தொழிலாளியான ராஜா அடிக்கடி மதுகுடிப்பாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் அறையில் தனியாக இருந்த அவா், மயங்கிக் கிடந்தாராம். அவரை மீட்ட குடும்பத்தினா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து பஜாா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்துள்ளனா். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...