ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியைச் சோ்ந்த இளங்கண்ணன் மகள் மீராலட்சுமி (26). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த வளா்மதி, தனது சகோதரி காயத்ரி பிரபல தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்ப்பதாகவும், அங்கு அடகு வைத்து திருப்பாத நகைகளை ஏலத்தில் ஒரு பவுன் ரூ.35 ஆயிரம் என குறைந்த விலைக்கு வாங்கலாம் எனவும் கூறியுள்ளாா். இதையடுத்து, மீராலட்சுமி மற்றும் அவருக்குத் தெரிந்தவா்களிடம் ரூ.10.50 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கிக் காசோலையாகவும் வளா்மதி உள்ளிட்டோா் வாங்கினராம். பின்னா் வளா்மதி தரப்பினா் நகைகளையும் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக மீராலட்சுமி உள்ளிட்ட பலா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மனு அளித்தனா்.