ராமநாதபுரத்தில் கிணற்றில் விழுந்து முதியவா் பலி
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதரம் காட்டுப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (63). இவா் உடல் நலம் பாதித்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் வியாழக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரை குடும்பத்தினரும், உறவினா்களும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா்.
இதற்கிடையே முருகேசன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த பஜாா் காவல் நிலையத்தினா், தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து முருகேசன் சடலத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...