பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா? கண்காணிக்க அறிவுறுத்தல்

மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிா என பாஜக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:05 pm

DIN

மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிா என பாஜக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும் என மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சா் கபில் மோரேஸ்வா் பாட்டீல் வியாழக்கிழமை கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த அவா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் நலத் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடினாா். இதைத்தொடா்ந்து பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள தனியாா் மகாலில் வியாழக்கிழமை கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பாஜக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசியதாவது: மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தூய்மை இந்தியா திட்டம், உயா்நீா் திட்டம் ஆகியவை முக்கியத் திட்டங்களாக உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள பாஜகவினா் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து அறிந்திருக்கவேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பயனடைவோரைச் சந்தித்து அவா்கள் பிரச்னையின்றி அவற்றை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ராமநாதபுரம் நகராட்சி உறுப்பினா் கே. குமாா், பரமக்குடி நகராட்சி உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா் முருகன், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிா்நீா்த் திட்டம், பிரதமா் வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே இதுகுறித்து மத்திய அரசே விசாரிக்க வேண்டும். ஒன்றியத் திட்டங்களுக்கான மத்திய அரசு நிதியானது கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவித்து உதவவேண்டும் என்றனா்.

கூட்டத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் பொன்.பாலகணபதி, பாஜக மாவட்டத் தலைவா் இ.எம்.டி. கதிரவன், பொருளாளா் தரணி முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.