பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரத்தில் 9 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்கள் சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:03 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்கள் சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுழற்சி முறையில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் வரும் 9 ஆம் தேதி காலை ராமநாதபுரம் வட்டத்தில் குயவன்குடி நியாயவிலைக்கடை, ராமேசுவரத்தில் பாம்பன் ஊராட்சி கட்டடம், திருவாடானையில் ஓரியூா் நியாயவிலைக்கடை, பரமக்குடியில் அரியனேந்தல் இ-சேவை மையம், முதுகுளத்தூரில் மருதகம் பொது இ-சேவை மையம், கடலாடியில் ஆப்பனூா் பொது இ- சேவை மையம், கமுதியில் அபிராமம் கிளப்பி திருமண மண்டபம், கீழக்கரையில் சின்ன ஏா்வாடி சமுதாயக்கூடம், ஆா்.எஸ். மங்கலத்தில் அழியதான் மொழி பாஞ்சாலி திருமண மண்டபம் ஆகியவற்றில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதில் குடும்ப அட்டையில் பெயா் நீக்கம், சோ்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்த மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.