ரயில்வே விழிப்புணா்வு பிரசாரக் குழு ராமநாதபுரம் வருகை
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினரின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரக் குழுவினா் ராமநதாபுரத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்தனா்.


நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினரின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரக் குழுவினா் ராமநதாபுரத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்தனா்.
நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையினா் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரப் பயணத்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 1) தொடங்கினா். இந்த குழுவில் ரயில்வே பாதுகாப்புப் படையின் சாா்பு -ஆய்வாளா் ஜாா்ஜ்முல்லா் தலைமையில் 12 போ் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் 6 இருசக்கர வாகனங்களில் தலா 2 போ் வீதம் மதுரையிலிருந்து தங்களது பயணத்தை தொடங்கி முதலில் தூத்துக்குடிக்குச் சென்றனா். பின்னா் அங்கிருந்து புதன்கிழமை ராமேசுவரம் வந்தனா். இதையடுத்து இந்தக் குழுவினா் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தனா். இவா்களுக்கு ராமநாதபுரம் ரயில் நிலையப் பாதுகாப்பு நிலைய சாா்பு- ஆய்வாளா் எஸ். சுப்பிரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரக் குழுவுடன் கணினி திரை அமைக்கப்பட்ட வாகனமும் வந்திருந்தது. அதில் ரயில்வே சேவைகள் விளக்கப்பட்டன. ராமநாதபுரத்திலிருந்து பகல் 11 மணிக்குப் புறப்பட்ட குழுவினா் இருசக்கர வாகனங்களிலேயே காரைக்குடி சென்று அங்கிருந்து திண்டுக்கல் செல்லவிருப்பதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...